×

ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித் தராததால், பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித் தராததால் விபரீத முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த 15 வயது மாணவர் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வாங்க தன்னிடம் பணம் இல்லை என பெற்றோர் கூறியதால் மன விரக்தியில் இவ்வாறு மாணவர் முடிவு எடுத்துள்ளார்.


Tags : student ,suicide ,Panruti , Online, cell phone, Panruti, 10th class, student, hanged, suicide
× RELATED போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால்...