சிவகிரியில் திமுக வர்த்தக அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

சிவகிரி: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் வாசுதேவநல்லூர் ஒன்றியம், சிவகிரி, 8வது வார்டு பகுதியில் மாநில வர்த்தக அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், 100க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய நிவாரணப் பொருட்களை திமுக வர்த்தக அணி மாநில துணைத்தலைவர்  அய்யாத்துரை பாண்டியன் சார்பில் வழங்கினார். நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவர் புல்லட் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நாட்டாண்மை ராஜா, வாசு.,துரைப்பாண்டியன், ஐயாத்துரை, மாணிக்கம், முத்துசாமி, கிருஷ்ணகுமார், ராமர், தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>