×

பெண் ஊழியர்களுக்கு பாலியல் டார்ச்சர் காரைக்குடி தாசில்தார் சஸ்பெண்ட்

சிவகங்கை: காரைக்குடியில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகள், குடியிருப்பு இல்லாத புன்செய் பகுதி, மனைவாடகை பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மனைவாடகை பகுதிகளை அளவீடு செய்து, பட்டா வழங்குவதற்காக காரைக்குடியில் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்தவர் மகாதேவன்.

இவர், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதனடிப்படையில் தாசில்தார் மகாதேவனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

Tags : Karaikudi Dashildar , Sexual torture , female employees, Karaikudi Dashildar ,Suspended
× RELATED போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு...