×

கொரோனா பாதிப்பு எதிரொலி: குமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தற்காலிக நிறுத்திவைப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து கழக அலுவலகங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான புதுப்பித்தலும் செய்யப்படமாட்டாது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தினசரி 30 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வாகன ஓட்டுனர்கள், நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கருத்து தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முடியாமல் அவதிப்படுவதாக கனரக வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் வழக்கம் போல் நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : district ,Kumari , Corona, Kumari District, Driving License
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...