×

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும்...: தமிழக அரசு விளக்கம்

சென்னை : திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. அதனையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், கூடுதல் தளர்வுகளாக டீக்கடை, உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம், கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் திறக்கலாம் என்றும், விமானம், ரயில், பேருந்து இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், தியேட்டர், பெரிய வணிக வளாகங்கள் திறக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் முழு முடக்கத்தில் திருமணங்களில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.



Tags : Government of Tamil Nadu ,weddings , Marriage, Restriction, Curfew, Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...