×

ஆரணியில் காதலனின் தந்தை மிரட்டியதால் மனமுடைந்த மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காதலனின் தந்தை மிரட்டியதால் மனமுடைந்த மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆரணியை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெண்ணிலா என்ற நர்சிங் மாணவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். தந்தை நாகராஜீக்கு பிரசாந்தின் காதல் விவகாரம் தெரிந்ததால் மாணவி வெண்ணிலாவை அவர் கண்டித்துள்ளார்.

மேலும் வெண்ணிலா வீட்டிற்கு சென்று நாகராஜீ கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்துள்ளார். காதலனின் தந்தை திட்டியதால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஆரணியில் அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.


Tags : Student ,suicide ,Arani Student , Student ,commits, suicide ,pouring, Arani
× RELATED பள்ளி மாணவன் தற்கொலை