×

லடாக்கில் ஒப்புக் கொண்டபடி சீனப் படைகள் வாபஸ் இல்லை!: அமைதியை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்..!!

டெல்லி: லடாக்கில் ஒப்புக் கொண்டபடி சீனப் படைகள் இன்னும் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்ட பிறகு இருநாட்டு உறவில் தொடர்ந்து விரிசல் நிலை காணப்படுகிறது. சீனாவில் தயாரான பொருட்களுக்கு இந்தியா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது இருநாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று சீனா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன தூதர் சன் விடோங் தெரிவித்ததாவது, ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழமுடியாது என்ற பொதுவான கட்டமைப்பு இன்னும் மாறவில்லை.

நமது பொருளாதாரங்கள் பின்னிப்பிணைந்தவை, ஒன்றொடு ஒன்று சார்ந்தவை. இந்தியா உறவு குறித்த சீனாவின் அடிப்படை கொள்கைகள் மாறவே இல்லை. பொருளாதார உறவை துண்டித்தால் இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார். அதேநேரத்தில் இந்தியாவோ, லடாக் எல்லையில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி படைகள் பின்வாங்குவது இன்னும் நிறைவடையவில்லை என்று கூறியுள்ளது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு சீனாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அனுராக் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டதாவது, எல்லையில் படைகளை முழுமையாக திரும்ப பெறவும், அமைதியை முழுமையாக நிலைநாட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பிலும் மூத்த ராணுவ அதிகாரிகள் விரைவில் சந்தித்து எல்லையில் படைகளை முழுமையாக திரும்ப பெறுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது. கல்வான் மோதல் எதிரொலியாக சீன மொபைல் செயலிகளை தடை செய்துள்ள இந்தியா, பிற தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்க ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : troops ,India ,Ladakh ,Chinese , Ladakh, Chinese forces, withdrawal, India
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...