×

வாலிபரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர், ஸ்ரீ சக்தி நகரை சேர்ந்தவர் உலகப்பன் (31). இவர் காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் உள்ள பேனா தயாரிக்கும் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் உலகப்பன் வேலைக்கு சென்றார். பின்னர், நள்ளிரவு 3 மணி அளவில் கம்பெனியில் இருந்து பேருந்து மூலமாக திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தம் வந்து இறங்கினார். பின்னர், அவர் தனது தந்தைக்கு போன் செய்து பைக்கில் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதன்பிறகு, அவர் சாலையோரமாக தந்தை வருகைக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 3பேர் வந்து இறங்கி உள்ளனர். பின்னர், அவர்கள் உலகப்பனை மிரட்டியுள்ளனர். அவரது பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து உலகப்பன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.


Tags : Extortion, cell phone, money laundering
× RELATED பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர்...