×

அமெரிக்கா அனுப்பியது செவ்வாய் கிரகம் ஆய்வு பெர்செவரன்ஸ் பாய்ந்தது

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பெர்செவரன்ஸ் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா ஆகியவை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பின. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்திற்கு நேற்று வெற்றிகரமாக விண்கலத்தை ஏவியது. ‘பெர்செவரன்ஸ்’ (விடா முயற்சி) என பெயரிடப்பட்ட இந்த விண்கலம், 2021ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடையும். இந்த விண்கலம் அங்கு ஒரு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வுகளில் ஈடுபட உள்ளது. கார் அளவிலான இந்த விண்கலத்தில் மினி ஹெலிகாப்டர், 25 கேமராக்கள் மற்றும் ஒரு ஜோடி மைக்ரோபோன்களும் பொருத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இது உதவும்.

இந்த விண்கலம் இதுவரை ஆய்வு செய்யப்படாத பகுதியை இலக்காக வைத்து ஏவப்பட்டுள்ளது. 300 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தின் பழமையான தன்மை, மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை இது சேகரிக்கும். 6 சக்கரங்களை கொண்ட இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு அங்கிருந்து பாறை, மண்ஆகியவற்றின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுகள் செய்யும். மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள ‘சூப்பர் ஸ்டெரிலைஸ்டு டைட்டானியம்’ குழாய்களில் 15 கிராம் அளவிற்கு இந்த மாதிரிகளை சேகரித்து, 2013ல் பூமிக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : Mars ,US , USA, Mars Exploration, Perseverance, Leaked
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...