×

வலி நிவாரணி மருந்துகள் போதைக்காக விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

வேளச்சேரி: பெருங்குடி பகுதியில் வலி நிவாரணி மருந்து, மாத்திரைகளை போதைக்காக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கடந்த 15 நாட்களாக பெருங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெருங்குடி பறக்கும் ரயில் நிலையம் அருகே வலி நிவாரணி மாத்திரையை ஒரு வாலிபர் விற்பது தெரிந்தது. அவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில் அவர், பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த தமிழரசன் (29) என்பதும், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரையை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்றதும் தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில், வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் மெடிக்கல் கடை நடத்தி வரும் வேளச்சேரியை சேர்ந்த சாதிக் பாட்ஷா (30) என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி 2400 வலி நிவாரணி மாத்திரைகள், 100 பாட்டில் இருமல் டானிக் மற்றும் ஊசிகள் மற்றும் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சாதிக் பாட்ஷா ஆந்திராவுக்கு சென்று, வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை கள்ளச்சந்தையில் வாங்கி வந்து, தமிழரசனிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்றுள்ளார். இதில் அதிக லாபம் கிடைத்ததால் கடந்த 6 மாதங்களாக இதை தொழிலாக செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : owner , Painkiller, drugs, drugs, sale, medical owner, 2 people, arrested
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...