×

முக்கிய வழக்குகளில் அரசுக்காக ஆஜராக சிறப்பு வக்கீல் ஏ.எல்.சோமயாஜி நியமனம்

சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் விஜய்நாரா யண் இருந்து வருகிறார். இவரை தவிர சேதுராமன், அரவிந்த் பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால், எமிலியாஸ், நர்மதா சம்பத் உள்ளிட்ட 9 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசின் சிறப்பு மூத்த வக்கீல் என்ற பதவியை, தமிழ்நாடு அரசு தற்போது புதிதாக உருவாக்கி உள்ளது. அந்த பதவிக்கு முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜியை நியமித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதலின் பேரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஏ.எல்.சோமயாஜி ஆஜராக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி 1995ல் சென்னை உயர் நீதிமன்றத்தால் மூத்த வக்கீலாக அங்கீகரிக்கப்பட்டவர். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்லாகவும், பின்னர், அட்வகேட் ஜெனரலாகவும் இருந்துள்ளார். சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.

Tags : Special Advocate AL Somayaji ,Government , The main case is the appointment of AL Somayaji, Special Advocate, to represent the State
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்