×

10வது நாளாக தொடர்ந்து விலை உயர்வு சவரன் 40,744க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 10வது நாளாக  நேற்றும் சவரனுக்கு ரூ.144 அதிகரித்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் ரூ.37,616, 21ம் தேதி ரூ37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184, 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும், 25ம் தேதி ரூ.39,232க்கும், 27ம் தேதி ரூ.40,104க்கும், 28ம் தேதி ரூ.40,296க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 9வது நாளாக கிராமுக்கு ரூ38 அதிகரித்து கிராம் ரூ.5,075க்கும், சவரனுக்கு ரூ.304 உயர்ந்து சவரன் ரூ.40,600க்கும் விற்பனையானது.

இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.5,103க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து சவரன் ரூ.40,824க்கும் விற்கப்பட்டது. மாலை வர்த்தகம் நேரம் முடிவில் தங்கம் விலை காலையில்இருந்த விலையை விட சற்று குறைந்தது.இருந்த பதிலும் நேற்று முன்தினம் விலையை விட தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5093க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து சவரன் ரூ.40744 க்கும் விற்கப்பட்டது. இதுவும் தங்கம் விலை வரலாற்றில் பதிய உச்சமாகும்.கடந்த 10 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.3128 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jewelry buyers , On the 10th day, the price hike, shaving to 40,744, shocked sales, jewelry buyers
× RELATED தங்கத்தில் விலை இன்று குறைந்ததால் நகை...