×

பள்ளத்தில் விழுந்து வாலிபர் பரிதாப பலி

செய்யூர்: செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (30). சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி மூர்த்தி, செங்காட்டூர் கிராமத்துக்கு சென்றார். பின்னர், இரவு இயற்கை உபாதை கழிக்க, தனது பைக்கில் வெளியே சென்றார். செங்காட்டூரில் இருந்து அனுமந்தபுரம் கிராமம் வரைஇ சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அவர், எதிர்பாராதவிதமாக பைக்குடன் அந்த பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள்  மூர்த்தியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் இறந்தார். குன்றத்தூர்: மாங்காடு அடுத்த சிவன்தாங்கலை சேர்ந்தவர் ரவீந்திரன் (34). தனியார் கம்பெனி வேன் டிரைவர். நேற்று மாலை ரவீந்திரன், வேலை முடிந்து வீட்டுக்கு வேனில் புறப்பட்டார். அப்போது, தனது பைக்கில் போடுவதற்காக கேனில் பெட்ரோல் வாங்கி, வேனின் இன்ஜின் மீது வைத்து கொண்டு வேனை ஓட்டினார்.

பூந்தமல்லி - குன்றத்தூர் சாலை சிக்கராயபுரம் அருகே வந்தபோது, திடீரென இன்ஜின் வெப்பம் தாங்காமல், பெட்ரோல் கேன் தீப்பற்றி எரிந்தது. அந்த தீ, ரவீந்திரன் மீது பற்றி எரிந்தது. உடனே அவர், வேனை நிறுத்திவிட்டு, தீயுடன் சாலையில் உருண்டு புரண்டு தீயை அணைக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற மக்கள், தீயை அணைத்து, ரவீந்திரனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : In the abyss, falling, youngster, killed
× RELATED அதள பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்:...