×

மினிவேன் மீது பைக் மோதி ஆசாமி பலி

செய்யூர்: புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் புவியரசன் (54). நேற்று முன்தினம் இரவு புவியரசன், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலை, சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் அருகே வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மினி வேனை புவியரசன் கவனிக்கவில்லை. இதனால், பைக் மினிவேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், படுகாயமடைந்த புவியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Asami , Minivan, bike collision, Asami killed
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...