×

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக தனிஷ்க் ஷோரூம்களில் நவீன பாதுகாப்பு வசதி

சென்னை: டாடா குழுமத்தின் தனிஷ்க் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமது ஷோரூம்களில் கோல்டு ஸ்டாண்டர்டு எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மின் புத்தகம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. கடை நுழைவாயிலில் பாத அணிகளை சுத்திகரிக்கும் விரிப்புகள், வெப்பநிலை பரிசோதனை கருவி, முகத்தடுப்பு ஷீல்டு, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின்னணு பண பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகைகளை சுத்திகரிக்க யு.வி.சி சேம்பர்ஸ்  எனப்படும் புற ஊதா கதிர் அறைகள் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் நகையை அணிந்து பார்த்த பிறகு நீராவி மூலம் சுத்திகரிப்பது, கிருமி நாசினி மற்றும் அல்ட்ராசானிக் பீம் ஆகிய முறைகளில் நகைகளை சுத்திகரிப்பது பேன்றவை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தனிஷ்க் நிறுவன சந்தைப்படுத்துதல் மற்றும் சில்லறை விற்பனை துறையை சேர்ந்த அருண் நாராயண் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எங்களின் அனைத்து ஷோரூம்களிலும் நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்களின் பாதுகாப்பு நடவடிக்கை என்.பி.எஸ் ரோலிங் ஆய்வில் மிக உயர்ந்த மதிப்பீட்டை பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வீடியோ அழைப்புகள் மூலம் நகைகள் வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,’’ என்றார்.

Tags : showrooms ,security facility ,Govt-19 , Kovit-19, Preventive Measures, Tanishq Showroom, Modern Security Facility
× RELATED கொரோனா பரவலை தடுக்க பெண் அமைச்சர் காரில் பாதுகாப்பு வசதி