×

எரிசாராயம் கடத்தல் வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்

மதுராந்தகம்:  மதுராந்தகம் அடுத்த ஒரத்தி அருகே அச்சிறுப்பாக்கம் - ஒரத்தி நெடுஞ்சாலையில் ஒரத்தி போலீசார், கடந்த 4ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் எரி சாராயம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, எரிசாராயத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 14ம் தேதி சாராய கடத்தலில் ஈடுபட்ட மதுராந்தகம், கரசங்கால் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் (28), திண்டிவனம் சலாவதி கிராமத்தை சேர்ந்த மாரி (எ) நண்டு மாரி (55) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் விமல்ராஜ், மாரியை ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், கலெக்டர் ஜான்லூயிஸ், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags : Erysipelas abduction, in case, 2 persons, Kundas
× RELATED மதுரையில் விசாரணை கைதி தப்பியோட்டம்