×

கழிவுநீர் ஓடும் கௌசிகா நதியை தூர் வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: விருதுநகர் மக்கள் கோரிக்கை

விருதுநகர்: விருதுநகரில் கழிவுநீர் ஓடும் கௌசிகா நதியை தூர் வாரி தடுப்பணை கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்ட காட்டுப்பகுதியில் பெய்து வரும் மழைநீர், விருதுநகர் மாவட்டத்திற்குள் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நிரம்பி வெளியேறும் நீர் கௌசிகா நதியாக உருவெடுக்கிறது. அக். துவங்கி டிச. வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது கௌசிகா நதியில் தண்ணீர் ஓடி குல்லூர்சந்தை அணை, அங்கிருந்து கோல்வார்பட்டி அணை நிரம்பி கடலுக்கு செல்லும்.

விருதுநகர் வழி செல்லும் கௌசிகா நதியில் விருதுநகர் நகராட்சி, பாவாலி, ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு ஊராட்சிகளின் கழிவுநீரும் விடப்படுவதால் கழிவுநீர் ஓடும் நதி மாறியுள்ளது. அருகில் உள்ள ஊராட்சிகளின் கழிவுநீர் கௌசிகாவில் நதியில் கலப்பதை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் ஒடும் மழைநீரை சேமிக்கும் வகையில் கருவேல முட்புதர் மண்டி கிடக்கும் கௌசிகா நதியை தூர்வாரி மூன்று இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : dam ,river ,Kaushika ,Virudhunagar , Sewage, Kaushika River, dam
× RELATED தென்காசியில் உள்ள அடவி நயினார் அணை,...