×

பீகாரில் வெள்ளப்பெருக்கால் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: நிவாரண உதவியின்றி குடும்பங்கள் உணவின்றி தவிப்பு

பாட்னா: பீகாரில் வெள்ளத்திற்கு 38,47,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,116 பேர் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் அரசின் நிவாரண உதவிகளின்றி குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தேசியப் பேரிடர் படை மற்றும் மாநில தேசியப் பேரிடர் குழு ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 8,77,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபால் பகுதியில் 81,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாத மழையினால் முசாபர்பூரில் கண்டாகி மற்றும் பக்மாதி நதிகளின் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

வீடுகள் பல நீருக்குள் மூழ்கின. இதனையடுத்து மக்கள் உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து 4-5 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நிர்வாகம் எந்த ஒரு உதவியையும் வழங்கவில்லை. குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. பலர் உணவின்றி தவித்து வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.



Tags : floods ,Bihar ,Families , Bihar, floods, people
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு