×

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு விவசாயிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் ரேஷனில் நவம்பர் வரை ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரை இருந்த நிலையில், ஜூலை மாதமும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து குடும்ப அட்டைதார்களுக்கு வருகிற நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார். தற்போது கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,Kamaraj ,Tamil Nadu , Tamil Nadu, November, 5 kg of rice, Minister Kamaraj
× RELATED கூடுதலாக ஈரப்பதம் இருந்தாலும் நெல்...