×

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்குக: சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரிய வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!!!

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 7-ம் கட்டமாக ஊரடங்கு  ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க  ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு  மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை  வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர். தொடர்ந்து கடந்த 28-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா பேரிடர் சமயத்தில் தினமும் மாணவர்களையோ, பெற்றோர்களை வரவழைத்து முட்டை  வழங்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால் ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை  கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாணவிகளுக்கு தொடர்ந்து நாப்கின் வழங்குவது  குறித்தும் விளக்கமளிக்க கோரிய நீதிபதிகள், பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து, முட்டை, நாப்கின் எப்படி  வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : school children ,The High Court ,government , Provide eggs and nappies to school children: High Court orders government in case of plan to provide nutrition ... !!!
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்