×

தென்மேற்கு பருவ மழையையொட்டி நெடுஞ்சாலைத்துறையில் உள்ளபாலங்களை பொறியாளர் ஆய்வு

ஜெயங்கொண்டம்: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் உள்ள பாலங்களை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். அரியலூர் கோட்ட பொறியாளர் ஜெயங்கொண்டம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட காரைக்குறிச்சி, சிந்தாமணி, சுத்தமல்லி, வெண்மான் கொண்டான் ஆகிய கிராமங்களில் உள்ள பாலங்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை சுட்டிக்காட்டி பாலங்கள் அடியில் தண்ணீர் ஓடுவதற்கு எவ்வித இடையூறும் இன்றி சீரமைத்து சுத்தமாக செய்து இருக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க வேண்டும்,

ஓடைகளில் இருந்து இந்த பாலத்தின் வழியாக செல்லும் தண்ணீரை விரயம் செய்யாமல் சேமிப்பதற்கு தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஜெயங்கொண்டம் உட்கோட்ட பொறியாளர் சிவராஜ்,உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : bridges ,Engineer , Southwest Monsoon, Highways, Engineering Survey
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...