×

கொரோனா ஒரு மனநோய், வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டுங்கள் : மருந்தே உட்கொள்ளாமல் நோயில் இருந்த மீண்ட பெலாரஸ் அதிபர் கருத்து!!

மின்ஸ்க்: கொரோனா வைரஸ் ஒரு மனநோய் என்றும் எந்த மருந்தும் உட்கொள்ளாமலேயே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தேன் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோ தெரிவித்துள்ளார். 9.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பெலாரஸ் நாட்டில் இதுவரை கொரோனாவால் 67,366 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 543 பேர் பலியாகிவிட்டனர். 61,442 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோவும் அறிகுறிகளே இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதிலிருந்து குணமான பிறகு, நேற்று முன்தினம் தன் நாட்டில் நடந்த ஒரு ராணுவ முகாமில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,நான் இப்போது கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மருந்து உட்கொள்ளாமலேயே மீண்டு வந்துள்ளேன்.
மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறுகிறார்கள். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இது ஒரு மனநோய் அவ்வளவுதான். நாட்டு மக்கள் அனைவரும் வோட்கா குடிக்க வேண்டும். அதுதான் கொரோனாவை அழிக்கும், என்றார்.


Tags : president ,Corona ,Belarusian ,Corona Drive Away ,Vodka kutittapati , Corona, Psychiatry, Vodka, Belarus, Chancellor, Comment
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...