×

கோவிலூரில் பாலம் உடைப்பால் வீட்டுக்குள் புகும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவிலூரில் பாலம் உடைப்பால் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் ஒன்றியம், மமூ.கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட 3, 4, 5 ஆகிய வார்டுகளின் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் இணைப்பாக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் தற்போது உடைந்து போய் உள்ளன. இதனால் சிறிய மழை பெய்தாலும் மழைநீர், கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் நுழைகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் பால்ங்கள் அனைத்தும் உடைந்து உள்ளன. இதனால் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. சில சமயம் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாலங்களை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : house ,suffering ,bridge collapse ,Kovilur , Kovilur, bridge, sewerage, public
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்