×

நெரூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பூங்காவை ஆக்கிரமித்து செடிகள் மண்டிக்கிடக்கிறது

கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றங்கரையோரம் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பூங்காவை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் இதனை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரம்மேந்திராள் ஆலயமும், காசி விசுவநாதர் ஆலயமும் உள்ளது. முக்கிய பவுர்ணமி, அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நு£ற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வார்கள். இதன் காரணமாக, இந்த பகுதிக்கு வரும் மக்கள் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றங்கரைக்கு எதிரே சிறுவர்கள் விளையாடும் வசதிகளுடன் கூடிய பூங்கா அமைத்து தரப்பட்டது.

ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இந்த பூங்கா பராமரிக்கப்பட்டது. தற்போது யாரும் உள்ளே செல்லாத காரணத்தினாலும், குடிமகன்களின் புகலிடமாக மாறியதன் காரணமாக, பூங்கா வளாகத்தை சுற்றிலும் முட்செடிகள் மற்றும் புதர்கள் படர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இதனை திரும்பவும் பராமரித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்து, பாழடைந்த நிலையில் உள்ள இந்த பூங்காவை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : banks ,park ,plants ,Nerur Cauvery River , Nerur, Cauvery Riverside, Park
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...