×

பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள திறந்த வெளியில், பல ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான மைதானம் ஏற்படுத்தப்பட்டது. அங்கு ஊஞ்சல், இரும்பு பார், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தினமும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதை தொடர்ந்தனர்.
 ஆனால், விளையாட்டு மைதானம் நாளடைவில் போதிய பராமரிப்பின்றி போனதால் ஆங்காங்கே புதர்சூர்ந்த இடமாக மாறியது. அதுமட்டுமின்றி, அங்கு அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி, அதனை மாற்றியமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.  

குரும்பபாளையத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான போதிய உபகரணங்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை முறையாக சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சுமார் 5ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும், சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : playground , playground
× RELATED குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த...