×

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30ல் இருந்து 15.75 சதவிகிதமாக குறைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்!

புதுடெல்லி: டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30ல் இருந்து 15.75 சதவிகிதமாக குறைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ்  தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.

அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின்  பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. வரி வருவாய்க்கு ஆசைப்படும் அரசுகள், மக்களுக்காக விலையைக் குறைக்க முன்வர மறுக்கின்றன. இந்த நிலையில் டெல்லி மாநில அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடிவு செய்துள்ளது. இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கூடிய டெல்லி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 16.75 சதவிகிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் ரூ.82 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.8.36 குறையும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



Tags : Delhi , Delhi, Diesel, VAT, Cabinet, Arvind Kejriwal
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...