×

தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவே மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்: அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆவேசம்!!

சென்னை : கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் குமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலையில் மர்ம நபர்கள் காவிக் கொடி கட்டியுள்ளனர். குழித்துறை 3 சாலை சந்திப்பில் அமைந்துள்ள முழு உருவ அண்ணா சிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் காவித்துண்டு கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழித்துறை போலீசார் அண்ணா சிலையில் கட்டி இருந்த காவி கொடியை அகற்றினர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அண்ணா சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலம் வில்லியனுரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலையின் கழுத்தில் காவி துண்டு கட்டியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.      

மு.க.ஸ்டாலின் பதிவு

இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு:

கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : idol ,Anna ,MK Stalin , The late grandfather, violence, brother idol, contempt, MK Stalin, rage
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!