×

தேசிய கல்வி கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவை ஒரு துடிப்புமிக்க அறிவு மையமாக மாற்றும் : பிரதமர் மோடி நம்பிக்கை


டெல்லி : தேசிய கல்வி கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவை ஒரு துடிப்புமிக்க அறிவு மையமாக மாற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நீண்ட காலத்திற்கு பிறகு கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அணுகுதல், சமநிலை, தரம் கட்டுப்படியாதல், பொறுப்பு நிர்ணயித்தல், கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் போன்றவை முக்கியமாக உள்ள தற்போதைய அறிவு யுகத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவை ஒரு துடிப்பு மிக்க அறிவு மையமாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளி கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்கு தேசிய கல்வி கொள்கை 2020 மிகவும் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களை மீண்டும்
அழைத்து வர புதுமையான கல்வி மையங்கள் கற்றலுக்கு பல்வேறு புதிய வழிமுறைகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கு புதிய கல்வி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய உயர்கல்வித்துறை முழுமையான மற்றும் பல்துறை அணுகுமுறையை கொண்டு இருக்கும் வகையிலும் நிகழ்வு தன்மை மிக்க பாடத் திட்டங்களை உருவாக்கவும் தொழில் கல்வியின் ஒருங்கிணைப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், இளநிலை கல்வி வழங்கும் வகையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா என்ற கூற்றுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஊக்குவிக்கும் முறைகளை தேசிய கல்வி கொள்கை உள்ளடக்கி உள்ளது என்றும் உயர்கல்வியில் பல்வேறு அயல்நாட்டு மொழிகளும் கற்று தரப்படும் என்றும் இந்திய சைகை மொழி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Tags : Modi ,India ,knowledge hub , National Education Policy, Changes, India, Knowledge Center, Prime Minister Modi, Hope
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி