இங்கிலாந்து - அயர்லாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி!: மாலை 6:30 மணிக்கு சவுத்தாம்டன் நகரில் ஆட்டம் தொடக்கம்..!!

சவுத்தாம்டன்: அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் எப்படியும் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற கனவில் உள்ள கத்துக்குட்டி அணியான அயர்லாந்து, நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முழு பலத்துடன் தயாராகவுள்ளது. ஆனால் இந்த போட்டி தொடர் அயர்லாந்து அணிக்கு 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் ஒன்றாகும். இதனால் அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 10 அணிகளில் தரவரிசையில் உள்ள முதல் 8 அணிகள் தகுதி சுற்று இல்லாமலேயே உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுவிட்டனர். அடுத்த 2 இடங்களுக்காக மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இவைகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் மற்றும் மற்ற சர்வதேச அணிகளுடன் மோதும் போட்டிகளில் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு அணிகள் எவை என்பது தெரியவரும்.

Related Stories: