×

விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை..: பிரேசில் அரசு அறிவிப்பு

பிரேசிலியா: விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை என பிரேசில் அரசு அறிவித்துள்ளது. கொரொனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில், வணிகம், சுற்றுலா என அனைத்து துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது.  இதுகுறித்து அரசிதழில் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், தரைமார்க்கம் அல்லது கடல் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தடைகள் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேசில் வந்து 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 1.6 கோடிக்கு அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில், கொரோனா வைரஸால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 50,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், 17 லட்சத்திக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : government ,Brazilian , Aircraft, foreign travelers, tourism, government of Brazil
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...