×

போலி செல்போன் எண் சரத்குமார் போலீசில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன  தலைவரும், நடிகருமான சரத்குமார் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், தனது செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி, அந்த எண் மூலம் அழைப்பு செய்து மோசடி செய்த கோவையை சேர்ந்த அசோக் என்ற மென்பொருள் இன்ஜினியர் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது செல்போன் நம்பரில் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளித்திருந்தார்.

Tags : Sarathkumar , Fake, cell phone number, Sarathkumar, complaint to police
× RELATED சரத்குமார் வேண்டுகோள் தூய்மைப்...