×

விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது

துரைப்பாக்கம்: புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிவிராஜ் (28). இவர், கானத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில் உத்தண்டியை சேர்ந்த தணிகா(40) என்பவரிடம் இருந்து தனது விலையுர்ந்த காரை மீட்டு தருமாறு கோரியிருந்தார். இதுபற்றி கானத்தூர் போலீசார் விசாரித்தினர். அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கிவிராஜ் தன்னுடைய பி.எம்.டபிள்யு காரை ரூ.6 லட்சத்திற்கு அடமானம் வைத்து இருந்தார். பின்னர் பணத்தை தந்துவிட்டு காரை பெற்றார். ஆனால் காரின் பதிவு சான்று தொலைந்துவிட்டதாக தணிகா கூறினார். கிவிராஜ் புதிதாக வாங்கிய காரை மதுரை செல்ல பெற்று சென்ற தணிகா ஒசூரை சேர்ந்த ஒருவருக்கு விற்றது தெரியவந்தது. போலீசார் தணிகாவை கைது செய்தனர்.

Tags : Expensive car, cheated, woman, arrested
× RELATED மதுரையில் சொகுசு கார்களில் பயங்கர...