×

நெல்லை கொரோனா வார்டில் இறந்தவர் உடலை அகற்ற 10 மணி நேரம் தாமதம்: நோயாளிகள் வெளியேறி கோஷம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இறந்தவர் உடலை அகற்ற 10 மணி நேரம் ஆனதால் நோயாளிகள் வெளியே வந்து போராட்டம் நடத்தினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் காக ஒதுக்கப்பட்டுள்ள  இஎன்டி வார்டில் நேற்று முன்தினம் சங்கரன்கோவிலை சேர்ந்த 65 வயது நோயாளி இறந்தார். அவரது உடலை அப்புறப்படுத்தி இறுதி சடங்கிற்கு கொண்டு செல்ல உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். பகல் ஒரு மணிக்கு அவர் இறந்த நிலையில், உடலை வெளியே கொண்டு செல்ல மாலை 4 மணி வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுமார் அரைமணி நேரம் வார்டை விட்டு வெளியில் வந்து போராடினர்.

இதனால் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா நோயாளிகள் வெளியே வந்துவிட்டதாக தகவல் பரவியதால் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்றனர். மருத்துவமனை அதிகாரிகள் உடலை வெளியே கொண்டு செல்ல அட்டன்டர் இல்லை என கூறி நோயாளிகளை வார்டுக்குள் செல்ல வலியுறுத்தினர். பின்னர் இரவு நேரத்திலும் இறந்தவர் உடலை அகற்ற நடவடிக்கையில்லை. இதற்கிடையில் இரவு 10.40 மணிக்கு இறந்தவரின் உடல் அங்கிருந்து வெளியில் எடுத்து செல்லப்பட்டது. இறந்தவர் உடலை வைத்து கொண்டு வார்டுக்குள் 10 மணி நேரம் நோயாளிகள் பரிதவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : deceased ,Nellie Corona Ward ,Nellai Corona Ward , Nellie, Corona Ward, dead body, removal, 10 hours late
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...