×

நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாததால் ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பம் பட்டினியில் தவிப்பு

அருப்புக்கோட்டை: தமிழகம் முழுவதும் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி ஒரு மூட்டைக்கு 47 ரூபாய் விளிம்புத்தொகையாக அரசு வழங்கி வந்தது. கடந்த 4 மாதமாக இந்த விளிம்புத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் நலிவடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், போதிய வருவாயின்றி விற்பனையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல் பட்டினியால் தவிக்கிறோம் என ரேஷன் கடை ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.


Tags : ration shop employee , Four months, lack of salary, ration shop employee, family starvation, suffering
× RELATED ரேஷன்கடை ஊழியர் மீது வழக்கு