×

வெளிநாடுகளில் தவித்த 473 இந்தியர்கள் 3 சிறப்பு விமானங்களில் சென்னை வருகை

சென்னை: ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து சிறப்பு தனி விமானம் நேற்று மாலை 163 இந்தியர்களுடன் சென்னை வந்தது. இவர்கள் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர். அவர்களை அந்த நிறுவனமே அரசின் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது. அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அனுப்பப்பட்டனர். பிலிப்பைன்ஸ்சிலிருந்து 143 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. அவர்களில் சவீதா மருத்துவக் கல்லூரியில் 126 பேரும், ஓட்டலில் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அபுதாபியிலிருந்து 167 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அவர்களில் 84 பேர் இலவச தங்குமிடங்களான தனியார் கல்லூரிக்கும், 78 பேர் ஓட்டலுக்கும், 5 பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று ஆந்திர மாநிலம் சித்தூர், சின்ன சேலம், நாகப்பட்டிணத்திற்கு சாலை வழியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags : flights ,Indians ,Chennai , Abroad, 473 Indians stranded, arriving in Chennai on 3 special flights
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து