×

நடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம்

வசந்தகால பறவைகள், சுகமான சுமைகள், தங்ககிளி உள்பட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலி. பெங்களூரில் வசித்து வரும் இவரின் அண்ணன் மகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இது கொரோனாவாக இருக்கலாம் என்று கருதிய ஷாலி, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே அனுப்பியது. இதனால் ஷாலி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உள்ளே இடமில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் சொன்னதை அவர் ஏற்கவில்லை.

கொரோனா நோயாளிகளை மருத்துவமனை தவிர்ப்பதை உணர்ந்த அவர், இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவிடம் அங்கிருந்தபடியே போனில் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து கமிஷனர் எடுத்த நடவடிக்கை காரணமாக ஷாலியின் அண்ணன் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகருக்கு தெரியவந்ததும், ‘ஷாலிக்கு மட்டுமல்ல பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் மருத்துவமனைகள் மோசமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

Tags : Hospital ,actress ,Minister , Actress, expelled, hospital, minister, condemned
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...