பேட்மின்டன் போட்டிகள் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: கொரோனா பீதி காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பேட்மின்டன் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக உலக  பேட்மின்டன்  கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பிடபிள்யூஎப் பொதுச் செயலாளர்  தாமஸ் லாண்ட் கூறியதாவது: எந்தவொரு பேட்மின்டன் போட்டியும் உலக சுகாதார அமைப்பு, உள்ளூர்  சுகாதார அமைப்புகளின் கட்டுப்பாடுகள் சர்வதேச மற்றும் உள்ளூர் பயண கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றுக்கு இணக்கமான சூழல் ஏற்படும் வரை போட்டிகளை தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது. வீரர்கள், ரசிகர்கள், தன்னார்வலர்கள், சங்க நிர்வாகிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. செப்.1 முதல் 6வரை நடைபெற இருந்த தைபே ஓபன்,  கொரிய ஓபன் (செப். 8-13), சீன ஓபன் (செப். 15-20), ஜப்பான் ஓபன் (செப். 22-27) தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தாமஸ் கூறி உள்ளார்.

Related Stories:

>