×

போக்குவரத்து விதி மீறியதாக ரூ.19.8 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 130 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதமாக ரூ.19.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 130 நாட்களில் 8 லட்சத்து 32 ஆயிரத்து 541 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 லட்சத்து 16 ஆயிரத்து 171 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 56 ஆயிரத்து 563 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று வரை 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரத்து 361 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Traffic rule, Rs 19.8 crore, fine, collection
× RELATED தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களில் சென்றால் ₹5 ஆயிரம் அபராதம்