×

தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த சிவராஜ் பிள்ளை மதுரை நகர திருப்பரங்குன்றம் உதவி கமிஷனராகவும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வினோதினி மதுரை மாவட்ட திருமங்கலம் டிஎஸ்பியாகவும், திருமங்கலம் டிஎஸ்பியாக இருந்து அருண் மதுரை நகர தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், ராமேஸ்வரம் டிஎஸ்பியாக இருந்த மகேஷ்  வேடசந்தூர் டிஎஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த முருகன் நிலக்கோட்டை டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த நமச்சிவாயம் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பியாகவும், சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த முத்து மாணிக்கம் சிவகங்கை டிஎஸ்பியாகவும், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த ஆனந்த் மதுரை நகர திலகர் திடல் குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், மதுரை நகர திலகர் திடல் உதவி கமிஷனராக இருந்த ஜெயகுமார் விருதுநகர் திருச்சுழி டிஎஸ்பியாகவும், சென்னை தலைமையிட சிறப்பு பிரிவு சிஐடியாக இருந்த சகாய ஜோஸ் அருப்புக்கோட்டை டிஎஸ்பியாகவும், அருப்புக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் டிஎஸ்பியாக இருந்த ப்ரான்சிஸ் அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாகவும், அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாக இருந்த சுபாஷினி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த ராஜூ ஊழல் மற்றும் லஞ்ச ஒழித்துறை டிஎஸ்பியாகவும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகடாமி டிஎஸ்பியாக இருந்த லட்சுமிகாந்தன் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொன்னிவளவன் ஆலங்குளம் டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த ரமேஷ் மதுரை நகர திலகர் திடல் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,DGP Tripathi , Tamil Nadu, 18 DSPs, change of workplace, DGP Tripathi
× RELATED தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை...