×

திருமழிசை காய்கறி சந்தை: கலெக்டர், எஸ்.பி. திடீர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருமழிசை துணைக்கோள் நகரப் பகுதியில் உள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தையை, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, சந்தையில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த பாதைகளை, கல் மற்றும் மண் கொண்டு சீர் செய்து சமன்படுத்தி, உறுதியான மற்றும் நிலையான  சாலைகளை அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர். நகராட்சி சார்பாக நீர் உறுஞ்சும் இயந்திரங்களை கொண்டு மழைநீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்.

பின் ஆடு, மாடுகளை தடுக்கும் முள் வேலிகள் ‌அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, அந்த பகுதிகளிலும் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை, நகராட்சி நிர்வாகம் வாயிலாக உடனுக்குடன் அப்புறப்படுத்தி, பிளிச்சிங் பவுடர் கொட்டப்படுவதை உறுதி செய்தனர். கழிவறைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நீர் இருப்பு உள்ளதையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து  முடிக்க  கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, திருமழிசை சிறப்பு வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், பூவிருந்தவல்லி தாசில்தார் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : S.P. ,SP , Tirumalisai, Vegetable Market, Collector, S.P., Research
× RELATED திருப்பத்தூர் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்