* 3 முதல் 18 வயது வரை கட்டாயக் கல்வி
* 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி
* 6ம் வகுப்பு முதல் தொழில் கல்வி* எம்.பில். படிப்பு இனி கிடையாது * பல்கலை, கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு * சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம்புதுடெல்லி: புதிய கல்வி கொள்கை - 2020க்கு மத்திய அமைச்சரவை நேற்று திடீரென ஒப்புதல் அளித்தது. இதில், 3 முதல் 18 வரை கட்டாய கல்வி, 6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி, எம்பில் படிப்பு இனி கிடையாது, பல்கலை.கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள், சட்டங்களை ஓசைப்படாமல் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் நேற்று அது இறங்கியது. இதன் முதல் கட்டமாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்வியாளர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமலுக்கு வரும் புதிய கல்விக்கொள்கையில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் வருமாறு: * புதிய கல்விக் கொள்கையானது ஆரம்ப நிலைக்கல்வி, தொடக்க நிலைக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என்று மாணவர்களை 4 முறையில் வகைப்படுத்துகிறது.* தற்போது 6 வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி என்று இருப்பது, 3 வயது முதல் 18 வரை என மாற்றப்படும். * பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வழங்கப்படும்.* புதிய 5+3+3+4 பள்ளிப் பாடத்திட்டம் 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு மற்றும் 3 ஆண்டு அங்கன்வாடி, மழலையர் பள்ளிப் படிப்பை கொண்டதாக இருக்கும்.* 6ம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வி தொடங்கப்படும்.* 5ம் வகுப்பு வரையில் தாய்மொழி, பிராந்திய மொழியில் பயிற்றுவிக்கப்படும்.* பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட மாட்டார்கள்.* பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் மும்மொழித் திட்டம் வழங்கப்படுகிறது. * நாட்டின் இதர செம்மொழிகள், இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும்.* எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. * இடைநிலைக் கல்வி அளவில் பல்வேறு வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும். * 3, 5, 8ம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும், உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். * 10. 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும். ஆனால், இது புதிய தேசிய மதிப்பீட்டு மையம், பராக் - திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் அறிவுப் பகுப்பாய்வு அடிப்படையில் திருத்தி அமைக்கப்படும்.* பாலினம், சமூக-கலாசாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். * ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், பகல் நேர உறைவிடப் பள்ளியாக.. ‘பால பவன்கள்’’ அமைக்க ஊக்குவிக்கப்படும்.* ஆசிரியர்கள் வெளிப்படையான நடைமுறை, தகுதிகள், செயல்திறன் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.* பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க, அகாடமிக் கிரெடிட் வங்கி உருவாக்கப்படும்.* தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.* எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.* டிஜிட்டல் கல்வி முறை விரிவுப்படுத்தப்படும். * 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். * எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படும்.* பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.2015 - 2020 வரை...* புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைகளை 2015 ஜனவரியில் இருந்து மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் பெறத் தொடங்கியது. * முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியனின் தலைமையிலான ‘புதிய கல்விக் கொள்கை உருவாக்கக் குழு’, 2016 ஆண்டு மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. * இஸ்ரோ முன்னாள் தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான, ‘தேசிய கல்வி வரைவுக் கொள்கைக்கான குழு’, கடந்த 2017ம் ஆண்டு ஜூனில் அமைக்கப்பட்டது.* இந்த குழு தேசிய கல்வி வரைவுக் கொள்கை அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சரிடம் கடந்த 2019, மே 31ம் தேதி சமர்ப்பித்தது.* கல்விக்கு ஜிடிபி.யில் 6 சதவீதம் நிதிகல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, கல்வித்துறைக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியின் அளவை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இருந்து 6 சதவீதம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.கல்லூரி படிப்புகளுக்கு உயர் கல்வி ஆணையம்புதிய கல்வி கொள்கையில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தொடர்பாக இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:* ஐஐடிக்கள், ஐஐஎம்.கள் ஆகியவற்றுக்கு இணையாக, பன்னோக்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும். * உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனை கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்.* மருத்துவம், சட்டப் படிப்புகளைத் தவிர மற்ற ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் தனியாக, ‘இந்திய உயர் கல்வி ஆணையம்’ அமைக்கப்படும்.உயர் கல்வியில் புதிதாக 3.5 கோடி இடங்கள்* பல்துறை நிறுவனங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும்.* கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 ஆண்டுகளில் காலாவதியாகும்.* கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை படிப்படியாக வழங்க, பல படிநிலைகளை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும்.* உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.* 2 லட்சம் ஆலோசனைகள்இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள், 6,600 வட்டங்கள், 6,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகளை மத்திய அரசு பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.