×

புதுகை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிக்கு நெஞ்சுவலிக்கு சிகிச்சை தர மறுப்பு: சித்ரவதைப்படுத்துவதை விட விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என மகன் ஆவேசம்

புதுக்கோட்ைட: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிக்கு நெங்சுவலிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இப்படி சித்ரவதைப்படுத்துவதை விட விஷ ஊசி போட்டு கொன்று விடலாம் என அவரது மகன் ஆவேசமாக பேசி உள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஒரு வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தந்தையும் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் உள்ளார். தந்தை நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், நெஞ்சு வலியை குணப்படுத்த அவருக்கு எந்த சிகிச்சையும் தரப்படுவதில்லை என்று மகன் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது வருமாறு: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர். இப்போ வந்து கொரோனா ரிசல்ட் பாசிட்டிவ் என சொல்லி ஒரு வாரமாக நான் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை புது கட்டிடத்தில் இருக்கிறேன் சார். எனது அப்பாவும் இங்கு தான் உள்ளார். 10 நாளுக்கு முன்னாடி வரை நல்லா இருந்த மனுஷன். நெஞ்சு வலி வந்ததால், இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். அவருக்கு கொரோனானு சொல்லி, எங்களையும் சேர்த்து இங்கேயே தங்க வைத்து விட்டனர். நாங்கலாம் நல்லாதான் இருக்கோம். ஆனா, எங்க அப்பாவுக்கு நெஞ்சுவலிக்கு எந்த டிரீட்மென்ட்டும் கொடுக்கவில்லை. ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிக்கிட்டு  இருக்கு.இங்கு வந்ததில் இருந்து எல்லாத்துக்கும் கொடுக்க கூடிய அதே பாராசிட்டமல் மாத்திரை, சாப்பாடு கொடுக்கிறாங்க. அவ்வளவுதான். சாப்பாடு சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. ரொம்ப மோசமாக இருக்கு. இங்கு உள்ள எல்லா டாக்டர்கள்கிட்டயும் பேசி பார்த்துட்டோம்.

யாருமே எங்க அப்பாவுக்கு டிரீட்மென்ட் கொடுக்க மாட்டேங்கிறாங்க. நாங்க 4வது தளத்தில் உள்ளோம். எங்க அப்பா 2வது தளத்தில் உள்ளார். எங்க அப்பா பெட்டுக்கு பக்கத்தில் உள்ள நோயாளிகளிடம் கேட்டுப்பாருங்கள். வீடியோ காட்டுகிறேன். எங்க அப்பா எவ்வளவு சிரமப்படுகிறார், கஷ்டப்படுகிறார் என்பதை பக்கத்து பெட்காரர்கள் சொல்வார்கள். எவ்வளவு உயர் அதிகாரிகளிடம் பேச முடியுமோ, அவ்வளவு பேரிடமும் ேபசி விட்டோம். இங்க கொரோனா வார்டில் நடக்குற அநீதி இதுதான். இப்படி கூட்டி வந்து எங்களை சித்ரவதைப்படுத்துறதுக்கு, எங்க அப்பாவையோ, எங்களையோ விஷ ஊசி போட்டு கொன்று விடலாம்.

இப்படி சித்ரவதை படுத்தாதீங்க. ஒழுங்கா டிரீட்மென்ட் கொடுத்து, நல்லபடியா எங்களை வீட்டுக்கு அனுப்பி வைங்க. அமைச்சர்கள்கிட்டயும், அரசாங்கத்துக்கிட்டயும் நான் கேட்டுக்கிறது இதுதான். இவ்வாறு பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி கேட்க புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டீனை நமது நிரூபர் செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.


Tags : patient ,Budugai Government Hospital ,Corona , Budugai Government Hospital, Corona, patient
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...