×

ரபேல் போர் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து..!!

டெல்லி: ரபேல் போர் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்திற்கு வந்திறங்கிய விமானங்களுக்கு முறைப்படி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ரபேலின் வருகைக்கு  பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதனையடுத்து, ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு  ரபேல் போர் விமானங்களை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்கிரஸ் அரசாங்கத்தின் உழைப்பு இறுதியாக பலனைத் தந்தது என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் வேறுபாடு அதிகம் இருப்பதாகவும், பாஜக அதில் பல மோசடி செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரபேல் கொள்முதல் பாஜகவின் 36 க்கு பதிலாக, 126 ஜெட் விமானங்களைப் பெறுவதை காங்கிரஸ் உறுதி செய்திருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 108 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


Tags : Indian Air Force ,Raphael ,party ,Congress , Raphael warplanes, Indian Air Force, Congress, greetings
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...