×

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் தொடர் மழை!: நடப்பு சீசனில் முதன்முறையாக நிரம்பியது குண்டாறு அணை..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நெல்லையில் உள்ள குண்டாறு அணை நடப்பு சீசனில் தற்போது முதன்முறையாக நிரம்பியுள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 36.10 அடியாகும். இந்த அணையில் சுமார் 25,000 கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. 1200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணை மூலம் ஆயிரத்து 123 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நேரடியாக 731 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. குண்டாறு அணையானது தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து தற்போது அணை முழு கொள்ளளவான 36.10 அடியை  எட்டி நிரம்பி வழிகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. குண்டாறு அணை நிரம்பியதால் நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : season ,time ,Western Ghats ,Gundaru Dam , Western Ghats, Continuous Rain, Gundaru Dam
× RELATED தோனிக்கு பேட்டிங் பிரச்னையில்லை… கீப்பிங்தான்! ராபின் உத்தப்பா பேட்டி