×

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பாஜக நினைக்கிறது: அதிமுகவுக்கும் இதற்கு உடந்தையா? கனிமொழி எம்.பி. கேள்வி..!!

சென்னை: விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பாஜக நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க, ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்திலும், சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில், சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை இழப்பதோடன்றி, காடுகளும் அரிய வகை உயிரினங்களும் அழிக்கப்படும் இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? என்று தனது ட்விட்டர் கணக்கில்  பதிவிட்டு கண்டன கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Kanimozhi ,AIADMK ,BJP , Farmers, BJP, AIADMK, Kanimozhi MP , Question
× RELATED ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்: கனிமொழி பேச்சு