×

தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை :ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்காக பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் 7 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இன்று பிற்பகல் தரையிறங்கின. 5 விமானங்களுக்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலிருந்து சுகோய் 30 எம்கேஐ விமானம் வாங்கப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட போர்விமானங்கள் இதுவாகும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பிரான்ஸ், எகிப்து கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரஃபேல் போர் விமானங்கள் வைத்திருக்கும் 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.  

இந்த சூழலில் இந்தியா வந்த ரஃபேல் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்துள்ளார். இந்த நிகழ்வு நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் சான்ஸ்க்ரிட் மொழியில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து தரை இறங்கியதன் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை, தேசத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல செயல், தேசத்தைப் பாதுகாப்பதே சிறந்த யாகம். இதைத் தாண்டி எதுவும் இல்லை. மகிமையுடன் வானத்தைத் தொட்ட விமானங்களை வரவேற்கிறேன், என்றார்.


Tags : nation ,Modi ,arrival ,Raphael ,India ,flights , Raphael flights, India, event, on, Prime Minister Modi, praise
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...