×

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் குளத்தில் மண் பரிசோதனை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் மண் பரிசோதனை நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இந்த குளத்தின் சுற்றுப்புறச் சுவர்கள் சேதமடைந்து சிதிலமடைந்துள்ளது. இந்த சுற்றுப்புற சுவர்களை சீரமைத்து குளத்தை புதுப்பிக்க ஆண்டாள் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக சுமார் 5 உயர்மட்ட குழுக்கள் அனுமதியை பெற்று தற்போது எஸ்டிமேட் போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே புதுப்பிக்கும் முன் குளத்தில் மண் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மண் பரிசோதனை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்து அதன் அடிப்படையில் மண் பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘எஸ்டிமேட் பணிகள் நிறைவடைந்த பின்னர் கோயில் குளத்தை சீரமைக்கவும், புதுப்பிக்கவும் பணிகள் துவங்கும் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Srivilliputhur Andal Temple Pond ,Soil Testing , Srivilliputhur, Andal Temple Pond, Soil Testing
× RELATED மண் பரிசோதனையோடு நிற்கும் திட்டம்...