×

தருமபுரியில் முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி கட்டிட வேலை செய்யும் 5 தொழிலாளர்களுக்கு ரூ.5000 அபராதம்

தருமபுரி: எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகவே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, ஏப்., 16 முதல், மாநகர பகுதிகளில் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு முகக்கவசம் அணியாமல், வெளியே வருபவர்கள் மீது, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தான், முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி 5 தொழிலாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டிட வேலை செய்யும் 5 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்ததால்  தருமபுரி மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். காலை உணவை சாப்பிடுவதற்காக முகக்கவசம் நீக்கிய இருந்த நேரத்தில் அங்கு வந்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.கட்டிட பணி ஒப்பந்ததாரர், தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தானே முன்வந்து செலுத்தினார்.


Tags : construction workers ,Dharmapuri Five ,Dharmapuri , Dharmapuri, mask, construction work, 5 workers, fine of Rs.5000
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...