×

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் விபரீதம்...!! தேனியில் ஒரே தெருவை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!!

தேனி: தேனியில் ஒரே தெருவை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4383 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் கடந்த ஒருவாரமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் பாலன் நகரில் ஏராளமாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஒரு துக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தெருவில் வசித்த அனைவரும் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அதிலும் சிலர் கூட்டமாக ஆட்டோவில் பயணித்துள்ளனர்.

பின்னர், துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆட்டோவில் பயணித்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதில் முதலில் 28 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், 28 நபர்களின் தொடர்பில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசோதனையானது நடத்தப்பட்டது. அதில் மேலும் 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரே தெருவை சேர்ந்த 46 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அவர்கள் அனைவரும் உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2077ஆக அதிகரித்துள்ளது. மேலும், இவர்கள் வசித்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தெருக்களின் அனைத்து நுழை வாயிலிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த தெருக்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிகின்றனரா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : mourning show ,Theni ,Corona ,street , Mourning show, tragedy, Theni, Corona
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு