×

விடாமல் மிரட்டும் கொரோனா...!! பீகாரில் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அதிரடி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீகாரில் மாநிலத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 1 முதல் 16 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது.

ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், நேற்று முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது.  இதன்படி, இந்தியாவில் 34,193 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 768 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9,88,029 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த கொரோனா அதிக மாநிலங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் பீகார் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நேற்று வரை மாநிலத்தில் கொரோனாவால் 43,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாதிப்பு காரணமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் ஏற்கனவே ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மேலும் 16 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவைகள் மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்படும்.

அரசாங்கத்தின் உத்தரவில் ஊடக நபர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க அலுவலகங்கள் 50 சதவீத துணை ஊழியர்களுடன் பணிபுரியும். வணிக மற்றும் தனியார் அலுவலகங்களும் 50 சதவீத பலத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாநிலத்தில் மூடப்படும். நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின்  போது மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Bihar , Corona, Bihar, Curfew, Extension, State Government
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...